உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரிசி கடத்திய வாலிபர்குண்டாஸில் கைது

அரிசி கடத்திய வாலிபர்குண்டாஸில் கைது

சேலம்: ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.சேலம், அன்னதானபட்டி லயன்மேட்டை சேர்ந்தவர் சண்முகம் (35). இவர் கடந்த ஒன்றரை ஆண்டாக ரேஷன் அரிசியை கடத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் இருந்து இதுவரை, 19 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லாரி, ஒரு மினி ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது. கடந்த 14ம் தேதி கொண்டலாம்பட்டியில், 50 கிலோ எடை கொண்ட 36 மூட்டை ரேஷன் அரிசியை இவர் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தார். சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸார், 36 மூட்டை அரிசியை பறிமுதல் செய்து, சண்முகத்தை கைது செய்தனர். சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சேலம் மத்திய சிறையில் சண்முகம் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை