உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில மோசடி புகாரில்இருவர் மீது வழக்கு

நில மோசடி புகாரில்இருவர் மீது வழக்கு

ஓமலூர்:ஓமலூர் அருகே, நிலமோசடி தொடர்பாக, இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பரவக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). அதே பகுதியில் அவருக்கு, 1.88 ஏக்கர் விளைநிலம் இருந்தது. அதே கிராமத்தில் வசிக்கும் அவருடைய அத்தை அம்மணியம்மாள் (45), போலி ஆவணம் தயார் செய்து, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு, கஜேந்திரன் நிலத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக, கடந்த ஜனவரி 21ல் ஓமலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.ஜூன் 30ம் தேதி மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் இளங்கோவன், கஜேந்திரன் கொடுத்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஓமலூர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.அதன் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கர்பாபு, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்ற அம்மணியம்மாள், நிலத்தை வாங்கிய கோவிந்தராஜ் (35) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:இந்த வழக்கு தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் மற்றும் ஓமலூர் சார்-பதிவாளர் அலுவலர் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்படும். அப்போது, போலி ஆவணம் மூலம் நில மோசடி நடந்திருப்பது தெரியவந்தால், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை