உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உரிமம் இல்லாமல் மீன்பிடிப்புவலைகள், பரிசல்கள் பறிமுதல்

உரிமம் இல்லாமல் மீன்பிடிப்புவலைகள், பரிசல்கள் பறிமுதல்

மேட்டூர்:மேட்டூர் அணையில் உரிமம் இல்லாமல் மீன் பிடித்தவர்கள் வலை மற்றும் பரிசல்களை மீன்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.மேட்டூர் அணையில் மீன்துறை உரிமம் பெற்று இரண்டாயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். எனினும் உரிமம் இல்லாமல் ஏராளமானோர் பரிசலில் சென்று சிறு ஆயவலைகள் மூலம் மீன்குஞ்சுகளை பிடிப்பதாக மேட்டூர் மீன்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தது.மேட்டூர் மீன்துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம், ஆய்வாளர் (பொறுப்பு) யுவராஜ் மற்றும் மீன்வள பாதுகாவலர்கள் மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, உரிமம் இன்றி அணையில் மீன்பிடிக்க பயன்படுத்திய நான்கு பரிசல்கள், 10க்கும் மேற்பட்ட வலைகளை மீன்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை