| ADDED : ஆக 01, 2011 04:10 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே காதலித்த பெண்ணுடன் குடும்பம் நடத்த பெற்றோர்
மற்றும் தனது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த வாலிபர் விவசாய
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.கெங்கவல்லி அருகே உள்ள
ஒதியத்தூரை சேர்ந்தவர் வீரையன் மகன் செந்தில்குமார் (30). லாரி கிளீனராக
வேலை செய்து வருகிறார். அவருக்கும், புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த கூத்தன்
மகள் தேவி (25) என்பவருக்கும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம்
நடந்தது. அதில், தேவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில்,
செந்தில்குமாருக்கும், திட்டகுடியை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண்ணுக்கும்
இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
இச்சம்பவம், செந்தில்குமார் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவரை
லாரிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரிக்கு
செல்வதாக தெரிவித்து சென்ற செந்தில்குமார், லாரிக்கு செல்லாமல் மஞ்சுவுடன்
தங்கி இருந்துள்ளார். இது, அவரது மனைவி தேவி மற்றும் பெற்றோருக்கு
தெரியவந்தது.நேற்று மதியம், ஆத்தூர், கல்லாநத்தம் பகுதியில்,
செந்தில்குமாரிடம் அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், இதுகுறித்து
பேசியுள்ளனர். அப்போது, தேவி, மஞ்சு ஆகிய இருவருடன் சேர்ந்து வாழ்வதாக,
செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.ஆனால், தேவியுடன் மட்டும் சேர்ந்து
வாழும்படி பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதற்கு எதர்ப்பு தெரிவித்த
செந்தில்குமார், அருகே இருந்த விவசாய கிணற்றில் குத்தித்துள்ளார்.
உறவினர்கள் கிணற்றில் குத்தித்து செந்தில்குமாரை மீட்டனர்.படுகாயமடைந்த
நிலையில், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.