உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் அ.தி.மு.க., அரசின்100வது நாள் கொண்டாட்டம்

சேலத்தில் அ.தி.மு.க., அரசின்100வது நாள் கொண்டாட்டம்

சேலம்: தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று, 100 நாள் ஆனதை கொண்டாடும் வகையில், சேலம் மாநகரில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.சேலம், தாதகாப்பட்டி, பில்லுக்கடை மைதானத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில், அ.தி.மு.க., அரசின், 100வது நாள் கொண்டாட்டம் நடந்தது. பழனி தலைமை வகித்தார். பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியில், கவுன்சிலர் பாண்டியன், ஜெ., பேரவை செயலாளர் சரவணமணி, வட்ட செயலாளர் பால்மார்க்கெட் சந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணைச்செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் விசாகன், சவுத்ரி, சாமிக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ