உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாஜி அமைச்சர் ஜாமீன்மனு இன்று விசாரணை

மாஜி அமைச்சர் ஜாமீன்மனு இன்று விசாரணை

சேலம்: சேலத்தில், நில அபகரிப்பு வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரது ஜாமீன் மனு, சேலம் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது .சேலத்தில் உள்ள கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரேம்நாத் என்பவருக்கு சொந்தமான நிலம் அபகரிப்பு வழக்கில், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையிலும், சுரேஷ்குமார் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை, 9ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராமதிலகம் உத்தரவிட்டார்.இதே வழக்கில் சிக்கியுள்ள சேகர், 'ஜிம்' ராமு, பாலகுருமூர்த்தி, ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஜான் அலோசியஸ், பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு, தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை