உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாதுகாப்பற்ற தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள்

பாதுகாப்பற்ற தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள்

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி வார்டுகளில், பாதுகாப்பற்ற திறந்தவெளி கிணறு தண்ணீரை பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலையில் மக்கள் உள்ளனர்.ஆத்தூர் முதல்நிலை நகராட்சியில், மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. அதில், 18, 28, 29, 30, 32, 33 உள்ளிட்ட வார்டுகளில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அதில், 29, 32, 30 போன்ற வார்டுகளில் உள்ள திறந்த வெளி கிணறுகளின் அருகில் நீர்மூழ்கி மின்மோட்டார் வசதியுடன், மேல்நிலை நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், மின்மோட்டார் பழுது, கிணறு ஆழப்படுத்தாதது போன்ற காரணத்தால், மேல்நிலை நீர் தொட்டிகளின் மூலம் குடிநீர் சப்ளை செய்வதில்லை. 29வது வார்டு அம்பேத்கர் நகரில் உள்ள திறந்த வெளி கிணற்றின் அருகில் மேல்நிலை தொட்டி மற்றும் மின்மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது.அதன் காரணமாக, அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் கயிறு கட்டி குடம், வாளி போன்ற பாத்திரங்கள் மூலம் தண்ணீரை எடுத்து வருகின்றனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பற்ற குடிநீர் அருந்துவதால், தொற்றுநோய் தாக்கத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, திறந்த வெளி கிணறு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டிகள் பராமரிப்பு செய்து, மின் மோட்டார்கள் பழுது சரிசெய்ய வேண்டும் என, ஆத்தூர் நகர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ