உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலை செய்யாமல் "எஸ்கேப்"ஆப்சென்ட் போட்ட அதிகாரி முற்றுகை

வேலை செய்யாமல் "எஸ்கேப்"ஆப்சென்ட் போட்ட அதிகாரி முற்றுகை

பனமரத்துப்பட்டி:சேலம் அருகே வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு 'எஸ்கேப்' ஆனவர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்ட யூனியன் அதிகாரிகளை, தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம், பனமரத்துப்பட்டி யூனியன், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்தில், தேசிய வேலை உறுதி திட்டத்தில், பெருமாள்மலை அடிவார ஓடை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில், நாள்தோறும், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை, ஓடை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை யூனியன் பி.டி.ஓ., சந்திரா, ஓவர்சீர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கணக்கெடுத்தனர். அதில், வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யாமல் 'எஸ்கேப்' ஆனதை கண்டுபிடித்தனர்.வேலை செய்யாமல் சென்ற, 10 தொழிலாளர்களுக்கு யூனியன் அதிகாரிகள் 'ஆப்சென்ட்' போட்டுவிட்டு, வருகைப்பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்தனர்.அப்போது, பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்த தொழிலாளர்கள், 'ஆப்சென்ட்' போட்டதை திருத்தி எழுதும்படி, யூனியன் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்துக்கு உள்ளே அதிகாரிகளை சிறைவைத்து, தொழிலாளர்கள் வெளியில் நின்று கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த மல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ