உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரி சூழ்ந்த குடியிருப்பு பகுதிக்குஅ.தி.மு.க., எம்.எல்.ஏ., "விசிட்

ஏரி சூழ்ந்த குடியிருப்பு பகுதிக்குஅ.தி.மு.க., எம்.எல்.ஏ., "விசிட்

சேலம்: சேலத்தாம்பட்டியில், ஏரி நீர் புகுந்த வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதிகளை, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்டாசலம் பார்வையிட்டார்.சேலத்தாம்பட்டி ஏரியை ஒட்டி, வீட்டு வசதிவாரியத்துக்கு சொந்தமான, 800 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், குடியிருப்பு வாசிகள் வெளியே வர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் யாரும், அவர்களை கண்டு கொள்ளவில்லை.குடியிருப்பு பகுதியின் அவல நிலை குறித்து, 'காலைக்கதிர் நாளிதழ்' இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டது. சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நேற்று, கட்சி நிர்வாகிகளுடன், சேலத்தாம்பட்டியில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்றார்.பொதுமக்களிடம், 'வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் மூலம், குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மேலும், மாநகராட்சி மூலம் குடிநீர் கிடைக்கவும், குப்பை அள்ளுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் வெளி ஆட்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை' எடுப்பதாக உறுதி அளித்தார்.வெறும் 'விசிட்'டுடன் நிறுத்திவிடாமல், குடியிருப்பு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ