| ADDED : செப் 17, 2011 03:08 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே வடசென்னிமலை அரசு கலைக்கல்லூரியில், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறையின், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு, 'படித்துக்கொண்டே வேலை செய்து, பொருளை தேடுதல்' என்ற தலைப்பில், எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஏஜன்டுகளாக சேர்ந்து வருவாய் சேமிப்பு போன்ற செயல்வழிமுறைகள் மற்றும் எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்தல், பயிற்சி முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.கல்லூரி முதல்வர் திருமூர்த்தி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கண்ணன், ஏ.ஐ.எம்.எஸ்., நடுநிலை தலைவர் சித்ரா, எல்.ஐ.சி., நிறுவன முதன்மை மேலாளர் ஜெயராமன், வளர்ச்சி திட்ட அலுவலர் காமராஜ், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.