| ADDED : செப் 30, 2011 02:33 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 58வது வார்டு சுயேட்சை வேட்பாளர், நேற்று தனது
தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.சேலம் மாநகராட்சி, 58வது
வார்டில், சுயேட்சை வேட்பாளராக கறிக்கடை பழனி போட்டியிடுகிறார். அவர்,
நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, செல்லக்குட்டிக்காடு,
பொம்மண்ணசெட்டி காடு, அம்பாள் ஏரி ரோடு, மூணாங்கரடு மற்றும் இந்திரா நகர்
பகுதி பொதுமக்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக
சென்று, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக தேர்தல் அதிகாரியிடம், வேட்புமனு
தாக்கல் செய்தார்.இதில், 58வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர்
கலந்துகொண்டனர். வேட்புமனு தாக்கல் முடித்த பின், தனது ஆதரவாளர்களுடன்
சென்று, 58வது வார்டில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது,
பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.