மேலும் செய்திகள்
மாநில தடகளப் போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு
18-Oct-2025
சேலம், தஞ்சாவூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு தடகள போட்டி நடந்து வருகிறது. இதில், சேலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில், பயிற்சி பெற்று வரும் பாரதி வித்யாலயா பள்ளி மாணவன் ரோகித், 17, கம்பு ஊன்றி தாண்டுதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் மாநில அளவில் இப்பிரிவில், 4.5 மீட்டர் உயரம் தாண்டியது தான் சாதனையாக இருந்தது. மாணவன் ரோகித் 4.6 மீட்டர் உயரத்தை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார்.கம்பு ஊன்றி தாண்டுதலில், 19 வயது ஆண்கள் பிரிவில் சேலம் விடுதியில் பயிற்சி பெற்று வரும் ேஹாலி கிராஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் கீர்த்திவாசன் முதலிடம் வந்து தங்கப்பதக்கம், சேலம் கிளேஸ்புருக் மெட்ரிக் பள்ளி மாணவன் சஞ்சய்குமார் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மூன்று பேரையும், தடகள பயிற்சியாளர் இளம்பரிதி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
18-Oct-2025