உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்

ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்

சேலம்:சேலம் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் நந்தினி, மாவட்ட சுகாதார அதிகாரி சவுண்டம்மாள், யோகனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், மாவட்ட எல்லையான செம்மங்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு ஸ்கேன் இயந்திரம் இருந்தது. தொடர்ந்து அங்கிருந்த, 30,000 ரூபாய், இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து அறிய, புதுச்சேரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த, 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மணிவண்ணன் என்பவரை பிடித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி