வாசகர்கள் கருத்துகள் ( 1 )
super sir, we bow down on you
மேலும் செய்திகள்
அரசு துவக்க பள்ளியில் நுாற்றாண்டு விழா
06-Apr-2025
பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 98 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கல்வியாண்டின் இறுதி வேலை நாளான கடந்த 17ல், பள்ளியின் ஆசிரியர் தெய்வநாயகம், மாணவ - மாணவியருக்கு விருந்து மற்றும் பரிசுகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வாழை இலையில் வெஜிடபிள் பிரியாணி, கேசரி, பழங்கள் வைத்து விருந்து கொடுத்தார். பள்ளியில் மாணவ - மாணவியர் மகிழ்வுடன் சாப்பிட்டனர். அடுத்த ஆண்டு, ஆறாம் வகுப்பு செல்ல இருக்கும், ஐந்தாம் வகுப்பை சேர்ந்த 28 மாணவ - மாணவியருக்கு பேனா, பென்சில், தேர்வு அட்டை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.இதுகுறித்து, ஆசிரியர் தெய்வநாயகம் கூறுகையில், “தொடக்கப் பள்ளியில் இருந்து மனநிறைவுடன் மாணவ - மாணவியர் வீட்டிற்கு செல்வதற்கு, பள்ளியின் சீதனமாக பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வியை தொடர்ந்து கற்க, ஊக்கம் அளிக்கும் விதமாக விருந்து மற்றும் பரிசு வழங்கப்பட்டன. இது போல, 17 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்றார்.
super sir, we bow down on you
06-Apr-2025