உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 2.77 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 2.77 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

சேலம், சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், நேற்று கோடை விடுமுறைக்கு பின் துவங்கப்பட்டது. முதல் நாளான நேற்றே, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.சேலம் மாவட்டத்தில், 1,640 அரசு மற்றும் உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 5 ம் வகுப்பு வரை, 67 ஆயிரத்து, 700 மாணவர்கள் தமிழ் வழியிலும், 31 ஆயிரத்து, 906 மாணவர்கள் ஆங்கில வழியிலும் படித்து வருகின்றனர். 350 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை, 1.16 லட்சம் மாணவர்கள் தமிழ் வழியிலும், 61 ஆயிரத்து 814 பேர் ஆங்கில வழியிலும் படித்து வருகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து, நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கும் முதல் நாளான நேற்று, 9.69 லட்சம் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தக பை, சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்று, 421 மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை