உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனி

சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனி

சேலம்: உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு, ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பொது வேட்பாளராக கறிக்கடை பழனியை தேர்வு செய்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன், செல்லக்குட்டிக்காடு பகுதியில், செல்லக்குட்டிக்காடு விஸ்வநாதன் ஏற்பாட்டில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், 600 பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி பொம்மண்ண செட்டிக்காடு பகுதியில் மூனாங்கரடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன், அண்ணா நகர் குப்புசாமி ஏற்பாட்டில், 800 பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் கண்ணம்மா, அவருடைய கணவர் இளங்கோ ஆகியோர் பேசும் போது, 'எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே, இந்த வார்டு அ.தி.மு.க.வசம் இருந்து வந்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில், இந்த வார்டை சேர்ந்த, 7 பேர் வாய்ப்பு கேட்டிருந்தோம். அவர்களில் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பக்கத்து வார்டை சார்ந்த ஒருவருக்கு இங்கே போட்டியிட அனுமதித்து சீட் கொடுத்துள்ளனர். அவர், மண்டல தலைவராக இருந்த போது, இந்த வார்டுக்கு வரவேண்டிய, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் தொட்டியை வராமல் தடுத்து, சீலநாயக்கன்பட்டிக்கு கொண்டு சென்றார். அவருக்கு இங்கே இடம் தரலாமா?' எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து கறிக்கடை பழனி பேசியதாவது: எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து, தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டுத்தான் பழக்கம். இப்பொழுது கூட, நான் மேயர் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கும், எனக்கு தேர்தல் அதிகாரி அறிவிக்கும் சின்னத்திற்கும்தான் ஓட்டு கேட்க உள்ளேன். உங்களுடைய பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றால், இந்த வார்டு புதியதாக மாநகராட்சியில் சேர்ந்துள்ளதால், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், அ.தி.மு.க., துணை செயலாளர் கோவிந்தசாமி, பிரதிநிதி முருகன், கோகிலா, பேரவை இணை செயலாளர் மணி, வட்ட பொருளாளர் நைனா சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சங்கர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுப்ரமணி, முன்னாள் அவைத் தலைவர் செல்வம், சவுந்தரராஜன், மகளிரணி செயலாளர் செல்வி, மற்றும் பழனிவேல், கோபால், மணிகண்டன், சரவணன், நடேசன், பழனிசாமி, கோவிந்தசாமி, கார்பெண்டர் சுரேஷ், சந்திரன் உட்பட, இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர், அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், 29ம் தேதி காலை 10 மணிக்கு, செல்லக்குட்டிகாடு முனியப்பன் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு, தாதகாப்பட்டி கேட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை