உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி சிறப்பு பஜனை வழிபாடு

ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி சிறப்பு பஜனை வழிபாடு

சேலம், சேலம் சூரமங்கலம், முல்லை நகர், ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலத்தில், சாய்பாபாவின் புண்ணிய திதியை ஒட்டி, நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் டிரஸ்ட் சார்பில் பஜனை வழிபாடு நடந்தது.கடந்த 25ல், கொடியேற்றத்துடன், ஆத்மஜோதி ஏற்றி, நாமஸ்மரணத்துடன் தொடங்கிய 7 நாள் புண்ணிய திதி, விஜயதசமி நாளான இன்று, (அக்.,2ல்) நிறைவு பெறுகிறது. அதையொட்டி,8:00 மணிக்கு மகா அபி ேஷகம், அலங்காரம் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் சாய் பஜனை, மதியம், 12:00 மணிக்கு ஆரத்தி, 1:00 மணிக்கு ஆத்ம ஜோதி தரிசனம் நடத்தப்பட உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஷீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மாலை, 4:00 மணிக்கு தரிசனம், 6:00 மணிக்கு துாப ஆரத்தி வழிபாடு, இரவு 7:00 மணிக்கு மாதவி லதாவின் கீர்த்தனை, 9:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சாய்பாபாவின் புண்ணிய திதியை ஒட்டி, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஷீரடி சாய் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி