உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடை பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி திருட்டு

கடை பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி திருட்டு

சேலம், சேலத்தில் வெள்ளி கடை பூட்டை உடைத்து, 7 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் கொண்டலாம்பட்டி புத்துார் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து,45; இவர் சேலம் கருங்கல்பட்டி பகுதியில் ராஜலட்சுமி எனும் பெயரில் வெள்ளி கடை நடத்தி வருகிறார்.கடந்த 14 இரவு கடையை மூடிவிட்டு சென்றவர், மூன்று நாட்களாக கடை திறக்கவில்லை. நேற்று காலை, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு, அங்கமுத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கமுத்து கடைக்கு வந்து பார்த்த போது, 7 கிலோ வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள், 5,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. அவர் அளித்த புகார் அடிப்படையில், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை