உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

கடை பூட்டை உடைத்துரூ.30 ஆயிரம் திருட்டுசேலம், செப். 28-பேக்கரி கடையின் பூட்டை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.சேலம் அருகே, பனமரத்துப்பட்டி குரால்நத்தத்தை சேர்ந்தவர் சதீஸ்வரன், 28. இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் இருந்த, 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை.இது குறித்து சதீஸ்வரன் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை