உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிவன் கோவிலை புனரமைக்க கடைகள் அகற்றம்

சிவன் கோவிலை புனரமைக்க கடைகள் அகற்றம்

வாழப்பாடி, வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து ரயில்வே கேட் அருகே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதன் கல்மண்டபம் உள்ளிட்டவை சிதிலமடைந்திருந்தன. இதனால் நன்கொடையாளர்கள் மூலம் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி, ஓராண்டுக்கு முன் தொடங்கி நடந்தது. இதற்கு கோவில் பூட்டப்பட்டது. சில மாதங்களாக புனரமைப்பு பணி நடக்கவில்லை. இந்நிலையில், கோவில் வளாகத்தில் இருந்த கடைகள், செயல் அலுவலர் கஸ்தூரி தலைமையில் நேற்று, பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. கோவில் சுற்றுச்சுவரும் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை