உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வலுதுாக்குதல் போட்டி: காந்தி உடற்பயிற்சி வீரர்கள் சாம்பியன்

வலுதுாக்குதல் போட்டி: காந்தி உடற்பயிற்சி வீரர்கள் சாம்பியன்

சேலம்: சேலம் மாவட்ட வலு துாக்கும் சங்கம் சார்பில், தாதகாப்பட்-டியில், மாவட்ட அளவில் கிளாசிக் பெஞ்ச் பிரஸ் வலு துாக்கும் போட்டி நேற்று நடந்தது. இருபாலருக்கும் பல்வேறு எடை பிரி-வுகளில் நடந்த போட்டியில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்-றனர். ஆண்கள், பெண்கள் என, இரு பிரிவுகளிலும், தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீரர், வீராங்கனையர் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்-றனர். தாதை ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர், வீராங்கனையர், 2ம் இடம் பிடித்தனர். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்-களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை, மாவட்ட வலுதுாக்கும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ