| ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
சேலம் : ''மழைக்காலம் துவங்குவதற்குள், சிவதாபுரம் கால்வாய் பணிகளை முடிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவேன்,'' என, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் கூறினார்.சேலம், சிவதாபுரம் பகுதியில் நடந்து வரும் கால்வாய் அமைக்கும் பணியை, எம்.எல்.ஏ., அருள் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட சிவதாபுரம் பகுதியில், சிறு மழை பெய்தாலும், மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்புகள் நீரில் மிதக்கும் நிலை இருந்தது. இதற்காக கடந்த இரு ஆண்டுகளாக சட்டசபையில் தொடர்ந்து பேசி, இரு கட்டங்களாக செஞ்சிக்கோட்டை பகுதிக்கு, ஆறு கோடி, சிவதாபுரம் பகுதிக்கு, 8 கோடி ரூபாய் நிதி பெற்று தந்து, பணி நடந்து வருகிறது. செஞ்சிக்கோட்டை பகுதியில், கால்வாய் அமைக்க விடாமல் தடுக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி தர வலியுறுத்தியுள்ளேன். இப்பணிகளை மழைக்காலம் துவங்குவதற்குள் முடிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவேன்.இவ்வாறு கூறினார்.பா.ம.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணை செயலர் சேகர் உடனிருந்தனர்.