தி காவிரி பொறியியல் கல்லுாரியில் அமைப்பியல் துறை கருத்தரங்கம்
மேச்சேரி, மேச்சேரி தி காவிரி பொறியியல் கல்லுாரியில், அமைப்பியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. துறைத்தலைவர் பிரபாவதி வரவேற்றார். முதல்வர் துரைசாமி தலைமை வகித்து பேசினார்.அதில் பொறியாளர் உதயசங்கர், புது கண்டுபிடிப்புகளை சரிசெய்தல், தொழில் தொடங்குவதற்கான பயிற்சி குறித்து பேசினார்.மற்றொரு பொறியாளர் விங்கேஸ்வர் தேவேந்திரன், ஆரம்ப கட்ட தொழில் முனைவோருக்கான முதலீடு, நிதி வாய்ப்பு குறித்த அமர்வு எனும் தலைப்பில், மாணவர் களுக்கு தொழில்நுட்ப சிந்தனைகளை வழங்கி, தொழில்நுட்ப தேவைகளையும் அவற்றை பயன்படுத்தும் முறையையும் கூறினார்.தி காவிரி கல்வி நிறுவன கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், செயலர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி, செயல் அலுவலர் கருப்பண்ணன், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர் நந்தகுமார், இணை பேராசிரியர் கவிஸ்ரீ, உதவி பேராசிரியர்கள் சக்திவேல், திலீப்குமார், மாணவர்கள் பங்கேற்றனர்.