மேலும் செய்திகள்
செவிலிமேடு பாலத்தில் நடைபாதை சீரமைப்பு
02-Dec-2024
வீரபாண்டி, டிச. 2-சீரகாபாடி அருகே கல்பாரப்பட்டி வழியே இளம்பிள்ளைக்கு செல்லும் பிரதான சாலையில், கொம்பாடிப்பட்டி காலனி அருகே பழமையான ரயில்வே பாலம் உள்ளது. குறுகலான பாலத்தை, கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. அரசு பஸ், லாரிகளே சிரமத்துடன் சென்று வருகின்றன. பாலத்தின் அடிப்பகுதி முறையான பராமரிப்பின்றி, சாலை அரிக்கப்பட்டு பள்ளங்களாக மாறியுள்ளன. அங்கு சாரல் மழை பெய்தாலும், ரயில்வே பாலத்தில் தண்ணீர் வந்து வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் வாகனங்கள் மட்டுமன்றி பாதசாரிகள் கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேங்கிய நீரில் பாலத்தை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அதனால் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு, சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவளிப்பட்டிஅதேபோல் வேம்படிதாளம் அருகே திருவளிப்பட்டியில் ரயில்வே பாலம் உள்ளது. அங்கும், 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பாலத்தின் இருபுறமும், 1 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சில நேரங்களில் சிக்கிவிடுகின்றன. இதுகுறித்து ரயில்வே துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என, மக்கள் குற்றம்சாட்டினர்.
02-Dec-2024