உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோசடி வழக்கில் சிக்கிய கிளை மேலாளர் சஸ்பெண்ட் ரத்து

மோசடி வழக்கில் சிக்கிய கிளை மேலாளர் சஸ்பெண்ட் ரத்து

சேலம்: மோசடி வழக்கில், கிளை மேலாளர் மீதான 'சஸ்பெண்ட்' ரத்து செய்யப்பட்டு, பணி இடமாற்றம் செய்யப் பட்டார். சேலம், அஸ்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை பணிமனையில், நிரந்தர டிரைவர், கண்டக்டர் பெயர்களில், தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்களை இயக்கி, 11 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்தது சமீபத்தில், கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கிளை மேலாளர் சீனிவாசன் உட்பட, ஐந்து பேர், அக்., 25ல், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் சீனிவாசன், நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஓசூர் கிளை பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றிய செல்வகுமார், அஸ்தம்பட்டி கிளைக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை தர்மபுரி மண்டல பொது மேலாளர் செல்வம் பிறப்பித்துள்ளார். மேலும், மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட டிரைவர்கள் பெயர் பட்டியலை, அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை