உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூரியமலை அடிவார கோவிலுக்கு தெப்பத்தேரில் சென்ற சுவாமி

சூரியமலை அடிவார கோவிலுக்கு தெப்பத்தேரில் சென்ற சுவாமி

இடைப்பாடி, இடைப்பாடியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, சுவாமியை, சூரியமலை அடிவாரத்தில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வர். பெரிய ஏரியில் தண்ணீர் இருக்கும்போது, தெப்பத்தேரில் சுவாமி கொண்டு செல்லப்படும். அதன்படி இந்த ஆண்டு சுவாமி ஊர்வலம் நேற்று நடந்தது. ஏரி நிரம்பி இருந்ததால், 4 பரிசல்களை ஒன்றாக கட்டி, அதன் மேல் தென்னை மரப்பலகைகள் கட்டப்பட்டு, சுவாமி செல்ல தயாராக, கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.அதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் சுவாமி வைக்கப்பட்டார். தொடர்ந்து சில பக்தர்கள், துடுப்பு பயன்படுத்தி, தண்ணீரில் கொண்டு சென்று, மறுகரையை அடைந்தனர். இதை ஏராளமானோர், ஏரியை சுற்றி நின்று கண்டுகளித்தனர். அங்கிருந்து சுவாமிகள், ஊர்வலமாக வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சென்ற சுவாமி, வெள்ளூற்று பெருமாள் கோவிலை சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின், மாலை மீண்டும், இடைப்பாடிக்கு சுவாமி கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை