தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அசத்தல்
தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுசேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அசத்தல்ஓமலுார், டிச. 22-தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில், சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்கள், 43 பேர் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.சேலம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி, ஓமலுார் அருகே குப்பூரில் செயல்படுகிறது. கடந்த அக்., 19ல், தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில், 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதன் முடிவு நேற்று முன்தினம் வெளியானது.சேலம் மாவட்டத்தில், 157 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்தது. குறிப்பாக சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்கள், 43 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். அதில் ஹர்ஷினி, அட்சயா, 100க்கு, தலா, 99 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில், 2ம் இடமும், கீர்த்திமாலினி, கவுரி, தலா, 98 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில், 3ம் இடமும் பிடித்துள்ளனர்.தொடர்ந்து பள்ளியில், தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அதில் மாநில அளவில் முதலிடம் பெற உழைத்த தமிழாசிரியை மைதிலியை, சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் பெருமாள் பாராட்டினார். சக ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பாராட்டினர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி கல்வி இயக்ககம் வழியே மாதந்தோறும், 1,500 ரூபாய், இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.