உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 ரயில்களில் கூடுதல் பெட்டி நவம்பர் முதல் தற்காலிக சேவை

3 ரயில்களில் கூடுதல் பெட்டி நவம்பர் முதல் தற்காலிக சேவை

சேலம், ரயிலில் நெரிசலை தவிர்த்து, பயணியர் தேவையை பூர்த்தி செய்ய, மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டி இணைத்து, தற்காலிக சேவை அளிக்கப்பட உள்ளது.அதன்படி, சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ.,1 முதல், அடுத்த ஆண்டு ஏப்.,27 வரை, 2 அடுக்கு கொண்ட ஒரு ஏசி பெட்டி, தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. அதேபோல, மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயிலில், நவ.,2 முதல், 2026, ஏப்.,28 வரை, ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ.,3 முதல், ஏப்., 29 வரை, 2 அடுக்குள்ள ஏசி பெட்டி, மறு மார்க்க ரயிலில் நவ.,4 முதல், ஏப்.,30 வரை, அதே வசதி கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.கோவை - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், நவ.,4 முதல், ஏப்.,28 வரை துாங்கும் வசதி கொண்ட பெட்டி, அதே வசதியுள்ள பெட்டி, மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயிலில், நவ.,5ல் இருந்து, ஏப்.,29 வரை இணைத்து இயக்கப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை