| ADDED : ஜன 07, 2024 10:32 AM
சேலம்: சேலம், 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தின், 33ம் ஆண்டு பேராலய பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி ஆயர் சிங்கராயன் கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஜோசப் லாசர், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், அருட்தந்தையர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். நேற்று நவநாள் திருப்பலி நடந்தது. தொடர்ந்து வரும், 14 வரை, மாலை, 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. 15 காலை, 7:00 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்க உள்ளது. இரவு, 7:15 மணிக்கு சேலம் மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில் தேர்மந்திரிப்பு, இரவு, 9:15 மணிக்கு உதவி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியரின் நற்கருணை ஆசீர், இரவு, 9:30 மணிக்கு பெருவிழா கொடி இறக்கம் நடக்க உள்ளது.