உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருடிய வேனை கடைவீதியில் விட்டுச்சென்ற சிறுவன்

திருடிய வேனை கடைவீதியில் விட்டுச்சென்ற சிறுவன்

ஆத்துார்: ஆத்துார், மாரிமுத்து சாலையை சேர்ந்தவர் கணேசன், 50. மினி சரக்கு வேனில் பழங்களை வைத்து விற்பனை செய்கிறார். நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு, இரவு வீடு முன் வேனை நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை, வேன் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அங்குள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, 16 வயது சிறுவன், வேனை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. பின் பல பகுதிகளில் தேடினார். கடைவீதி சாலையில் தேடியபோது, திருடுபோன வேன் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து கணேசன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால், வேனை சிறுவன் திருடிச்சென்ற வீடியோ காட்சி பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி