உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவர் கைது

காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவர் கைது

சேலம் : காதலியை, அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.சேலம், சூரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் விஜயகணேஷ் மனைவி பிரியா, 28. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் விஜயகணேஷ் இறந்துவிட்டார். பிரியா பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, வீராணம் டி.பெருமாபாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் கோகுல், 23, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின் அவர்கள் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த இரு மாதங்களாக கோகுலுடன் பிரியா சரியாக பேசவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம், 4 ரோடு பஸ் ஸ்டாப்பில் நின்ற பிரியாவிடம், தன்னிடம் பேசாமல் தொடர்பை துண்டிப்பது ஏன்? என கேட்டு கோகுல் தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோகுல் அரிவாளால், பிரியாவின் தலை, கழுத்தில் வெட்டினார். அங்கிருந்த மக்கள், கோகுலை பிடித்து பள்ளப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில், பிரியா சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி