உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரவள்ளி கிழங்கு மூட்டைக்கு 80 ரூபாய் விலை உயர்ந்தது

மரவள்ளி கிழங்கு மூட்டைக்கு 80 ரூபாய் விலை உயர்ந்தது

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல், பச்சமலை, கல்வராயன்மலை பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக மரவள்ளி சாகுபடி உள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் உள்பட, 18 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், மரவள்ளி கிழங்கு மூட்டை, 350 முதல், 450 ரூபாய் வரை விலை இருந்தது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால், நேற்று ஒரு மூட்டை கிழங்கு, 510 முதல், 531 ரூபாய் என, விற்பனையானது.இதுகுறித்து, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், 'ஜவ்வரிசி மூட்டை, (90 கிலோ) 3,500 ரூபாய், ஸ்டார்ச், 2,500 ரூபாய் என விலை உள்ளது. மரவள்ளி கிழங்கு அறுவடை முடியும் தருவாயில் உள்ளதால், சேகோ ஆலைக்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரத்தை விட, மூட்டைக்கு, 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட, மூட்டைக்கு, 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை