உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜாமினில் வந்ததும் ரவுடிகள் கைது; உறவினர்கள் சாலை மறியல்

ஜாமினில் வந்ததும் ரவுடிகள் கைது; உறவினர்கள் சாலை மறியல்

சேலம் : கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரவுடிகள் பிரசாந்த், அமர்நாத், ராஜேஷ், பிரவீன். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு, 4 பேரையும், போதை பொருள் வழக்கில் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று சிறையில் இருந்து, 4 பேரும் ஜாமினில் வெளிவந்தனர். ஆனால் சிறை வளாகம் முன்பே, 4 பேரையும், வேறு ஒரு வழக்கில் கோவை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, அவரது உறவினர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், சிறை முன், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக துாக்கி அகற்றி சமாதானப்படுத்தி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ