உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம்

ஏரியில் செத்து மிதந்த மீன்களால் துர்நாற்றம்

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலம் ஏரி, 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தில் துார்வாரி ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி பலப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து கஞ்சமலையில் இருந்து சீரகாபாடி, கடத்துார், பெத்தாம்பட்டி ஏரிகளுக்கு வரும் மழைநீர், எஸ்.பாலம் ஏரிக்கும் வரும்படி இருந்த மழைநீர் ஓடையை துார்வாரியதால், 2 ஆண்டுகளாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.தற்போது கோடை முடிந்தும் மழை பெய்யாததால், ஏரிக்கு நீர் வரத்து இல்லை. மீன்கள், வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் செத்து கரை ஒதுங்கியுள்ளன. பாசிபடர்ந்து தேங்கியுள்ள நீரில் செத்த மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. இறந்த மீன்களை அகற்றுவதோடு தொற்று பரவாமல் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை