உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / யூனியன் சேர்மன் ஆனார் போலீஸ் எஸ்.ஐ., மனைவி!

யூனியன் சேர்மன் ஆனார் போலீஸ் எஸ்.ஐ., மனைவி!

சேலம்: சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை, சிறப்பு எஸ்.ஐ.,யின் மனைவி கோமதி, தி.மு.க., கெங்கவல்லி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் இன்று காலை நடந்தது. தி.மு.க., சார்பில் எட்டாவது வார்டு கவுன்சிலர் கோமதி என்பவர் மட்டுமே மனு தாக்கல் செய்தார். மற்ற நபர்கள் யாரும் போட்டியிடாதால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சங்கமித்ரா அறிவித்தார். இவர் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு எஸ்.ஐ., ராமச்சந்திரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை