உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீரன் சின்னமலையை ஓட்டுகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்

தீரன் சின்னமலையை ஓட்டுகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்

சங்ககிரி: சங்ககிரி, மாவெலிபாளையம், வாணி நகரை சேர்ந்தவர் நித்யா, 37. நாம் தமிழர் கட்சி, சங்ககிரி தொகுதி வேட்பாளரான இவர், சங்ககிரியில் நேற்று அளித்த பேட்டியில், ''சங்ககிரியில் உள்ள சாலைகள், நுாலகத்துக்கு, வரலாற்று சிறப்பு மிக்க தீரன் சின்னமலை பெயரை கூட வைக்கவில்லை. அவரை அரசியல் கட்சியினர், ஓட்டுகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். நாங்கள் வெற்றி பெற்றதும் தீரன்சின்னமலைக்கு உண்டான முக்கியத்துவத்தை கொண்டு வருவோம்,'' என்றார்.மண்டல செயலர் வடிவேல், சங்ககிரி நகர தலைவர் செல்வரத்னம், நகர செயலர் சீனிவசான், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலர் சிவக்குமார், மகளிரணி நிர்வாகி செல்வராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை