உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபரை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை மிரட்டி பணம்பறித்த மூன்று பேர் கைதுசேலம்:சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ஹரிஸ், 23, நேற்று முன்தினம் எருமாபாளையம் பிரதான சாலையில், உள்ள ஏ.டி.சி., டெப்போ அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள், ஹரிஸிடம் கத்தியை காட்டி மிரட்டி, 7,200 ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிச்சிபாளையத்தை சேர்ந்த விஜய், 26, யோகேந்திரன், 24, சுரேந்தர், 24, ஆகியோரை கைது செய்தனர். மேலும் நவீன், சுஹேல், சுலைமான், சங்கரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி