உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ் மோதி மூன்று பேர் காயம்-

தனியார் பஸ் மோதி மூன்று பேர் காயம்-

ஓமலுார், ஓமலுார் அருகே கருப்பூரை சேர்ந்தவர் தாமோதரன், 33. ஆயுதப்படையில் காவலராக பணிபுரிகிறார். நேற்று மாலை, 5:30 மணியளவில் ஸ்பிளண்டர் பைக்கில் மனைவி மனோப்ரியா, 28, மகன் தமிழ்இனியன் ஆகிய மூவரும் அமரகுந்தியில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்று விட்டு ஓமலுார் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், மேட்டூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில் பைக்கில் சென்ற மூவருக்கும் காயம் ஏற்பட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி