உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரே குடும்பத்தில் 3 பேர் துாக்கிட்டு தற்கொலை

ஒரே குடும்பத்தில் 3 பேர் துாக்கிட்டு தற்கொலை

சேலம்:கடன் தொல்லையால், பிளஸ் 1 மாணவியுடன், அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.சேலம், அரிசிபாளையம், முத்தையாளு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ், 45; வெள்ளி பட்டறை தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரேகா, 38. இவர்களது மகள் ஜனனி, 16; பிளஸ் 1 படித்தார்.இந்த தம்பதி, வெள்ளியை கட்டியாக வாங்கி, கொலுசு உள்ளிட்ட பொருட்களை வீட்டிலேயே செய்து வந்தனர். பால்ராஜின் சகோதரர்கள், அவரது தாய் கவுசல்யா ஆகியோர் அதே பகுதியில் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு, வங்கி உள்ளிட்ட இடங்களில் கடன் வாங்கி பால்ராஜ் புதிதாக வீடு கட்டினார்.தொழில் சரியாக நடக்காததால், கடன் தொல்லை அதிகரித்து, வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் வங்கியில் இருந்து வந்தவர்கள் பணம் செலுத்த வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று ஜனனி பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள், வீட்டுக்கு சென்றபோது கதவு திறந்திருந்தது. மாடியில் உள்ள அறையில் மூன்று பேரும் துாக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர். 'அதிகளவு கடன் வாங்கி விட்டேன். திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம்' என, பால்ராஜ் கடிதம் எழுதி வைத்து இருந்தார். போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை