9 வண்ணங்களில் டிஷ்யூ ரக வேட்டிகள் சர்ட்டுகள்; ராம்ராஜ் காட்டன் அறிமுகம்
சேலம்: திருப்பூரில் உள்ள ராம்ராஜ் காட்டன் தலைமையகத்தில், நிறுவனரும், தலைவருமான நாகராஜன், இந்த தீபாவளிக்கு, 9 வண்ணங்கள் கொண்ட டிஷ்யூ ரக வேட்டி, சர்ட்டுகளை அறிமுகப்படுத்தினார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தில், கடந்த, 42 ஆண்டுகளாக, 4,000க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பளபளக்கும் ஜரிகை வேட்டிகள், சர்ட்டுகள் காப்பர், ராமர் க்ரீன், கோல்ட், ரோஸ் கோல்ட், லாவண்டர், சியான், மாஸ் க்ரீன், சில்வர், ஸ்டீல் க்ரீன் ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் வேட்டி, சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.சங்கல்பம், 2 மீட்டர் டிஷ்யூ செட், அரைக்கை, 1,550 ரூபாய், முழுக்கை, 1,650 ரூபாய்; சங்கல்பம் 2 மீட்டர் அட்ஜஸ்டபுள் டிஷ்யூ செட், அரைக்கை, 1,650 ரூபாய், முழுக்கை, 1,800 ரூபாய்; கல்ச்சர் கிளப்மாச்சோ டிஷ்யூ கலர் சர்ட் மற்றும் மேட்சிங் பார்டர் வேட்டி செட், அரைக்கை, 1,600 ரூபாய், முழுக்கை, 1,700 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 5,000க்கும் மேற்பட்ட ராம்ராஜ் காட்டன் டீலர்களுக்கு இந்த டிஷ்யூ ரக வேட்டி, சர்ட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.