உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: டிரைவர் கைது

ரூ.3 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: டிரைவர் கைது

ஓமலுார், ஓமலுார் போலீசார், நேற்று காலை, புளியம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 350 கிலோவில், புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். விசாரணையில், ஓட்டி வந்தவர், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக், 28, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், லாரியுடன், புகையிலையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை