உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காடு: ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் சுற்றுலா பய-ணியர் வருவர். கடந்த இரு வாரங்களாக பனிமூட்டம் இருந்-ததால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் கடந்த, 3 நாட்களாக பனி மூட்டம் விலகி இயல்பு நிலை திரும்பியது. இதனால் நேற்று காலை முதலே, சுற்றுலா பயணியர் வரத்தொடங்கினர். அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ட்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், படகு இல்லம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணியர் குவிந்-தனர். இதற்கேற்ப பஜ்ஜி உள்ளிட்ட வியாபாரம் சூடுபிடித்ததால், உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டூரில் சரிவுமேட்டூர் அணையில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 3,781 பேர் பூங்காவையும், 567 பேர் பவளவிழா கோபுரத்தையும் பார்வையிட்டனர். இதன்மூலம், 43,480 ரூபாய், 1,666 மொபைல் போன்களுக்கு தலா, 10 ரூபாய் வீதம், 60,140 ரூபாய் கட்டணம் வசூலானது. கடந்த, 2ல் பூங்காவை, 11,127 பேர், பவளவிழா கோபுரத்தை, 1,455 பேர் பார்வையிட்டனர். தவிர மொபைல் போன்கள் என, 1,79,300 ரூபாய் கட்டணம் வசூலானது. அதனுடன் ஒப்பிடு-கையில் நேற்று அணை பூங்காவுக்கு, 3ல் ஒரு பங்கு சுற்றுலா பய-ணியர் மட்டுமே வந்தனர்.கார்த்திகையில் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வர். இதனால் பூங்காவுக்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை சரிந்ததாக, பூங்கா ஊழியர்கள் தெரிவித்-தனர். அதேபோல் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் உள்ள படகு துறை, ஆத்துார் அருகே ஆணைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரியில், ஏராளான சுற்றுலா பயணியர் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி