உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

வீரபாண்டி, டிச. 12-வீரபாண்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், ராஜாபாளையம் கிராம பண்ணைப்பள்ளியில், பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதில் விவசாயிகளுக்கு, ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் பழனிசாமி, பயிற்சி அளித்தார். இதில், 25 விவசாயிகள், 5 பேர் அடங்கிய, 5 குழுக்களாக பிரித்து, உளுந்து வயலில், டி.ஏ.பி., கரைசல், பயறு ஒண்டர் கரைசல் தயாரிப்பு, தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது உளுந்து பயிர் பூ பிடிக்கும் பருவத்தில் உள்ளதால், 2 சதவீத, டி.ஏ.பி., கரைசலுடன், என்.ஏ.ஏ., பயிர் வளர்ச்சி ஊக்கி கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை