உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜெயராக்கினி ஆலயத்தில் திருப்பலி, தேர் உலா

ஜெயராக்கினி ஆலயத்தில் திருப்பலி, தேர் உலா

ஓமலுார்: ஓமலுார் அருகே நாரணம்பாளையம்புதுாரில் உள்ள அன்னை ஜெயராக்கினி ஆலயத்தில், கடந்த ஜன., 25ல், பெருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் திருப்பலி நடந்தது. நேற்று காலை மெழுகு திரி பவனி நடந்தது. சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தார்.அதில், தமிழக திரு வழிபாட்டுக்குழு பொதுச்செயலர் எம்மானுவேல், ஆப்ரிக்காவில் அருள் பணியாற்றும் ஆனந்த் உள்ளிட்டோருடன், ஆடம்பர பெருவிழா கூட்டு பாடற்பலி நடந்தது. மாலையில், வேண்டுதல் திருப்பலி, வேண்டுதல் தேர் உலா நடந்தது. நாரணம்பாளையம் பங்குத்தந்தை அருள்சுந்தர், திரளான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை