உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் தேர்வு

லாரி உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் தேர்வு

சேலம்: சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்துக்கு, 2024 - 27 நிர்வாகிகள் தேர்தல் கடந்த, 18ல் நடந்தது. இதில் தனராஜ், மணிகண்டன் தலைமையில் இரு குழுவினர் போட்டியிட்டனர். 1,081 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். அதில், 391 ஓட்டுகள் வித்தியாசத்தில் தலைவராக தனராஜ் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், 209 ஓட்டுகள் வித்தியாசத்தில் பொருளாளராக செந்தில்குமார் வெற்றி பெற்றார். செயலராக குமார், போட்டியின்றி தேர்வானார். உதவி தலைவர்களாக சபாரிகுமார், ரகுநாதன், இணை செயலராக தங்கவேலு, அன்பு ஆகியோரும், 18 நிர்வாக குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்