உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒயர் அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் சாயப்பட்டறை தொழிலாளி 2 பேர் பலி

ஒயர் அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் சாயப்பட்டறை தொழிலாளி 2 பேர் பலி

ஓமலுார் : ஒயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், சாயப்பட்டறை தொழிலாளி, 2 பேர் உயிரிழந்தனர்.காடையாம்பட்டி, குப்பி நாயக்கனுாரை சேர்ந்தவர் பெருமாள், 45. இவரது மனைவி கொளத்துாரில் வசிக்கிறார். கஞ்சநாயக்கன்பட்டி மேல் மோட்டூரை சேர்ந்தவர் ராஜூ, 32. இவருக்கு மனைவி சுதா, 30, இரு குழந்தைகள் உள்ளனர். பெருமாள், ராஜூ, காருவள்ளியில் உள்ள சாயப்பட்டறையில் பணிபுரிந்தனர். நேற்று இரவு, 8:00 மணிக்கு பணி முடிந்தபோது, காற்றுடன் மழை பெய்தது. இதனால் பட்டறை உரிமையாளரின், 'யுனிகான்' பைக்கை வாங்கிக்கொண்டு, இருவரும் புறப்பட்டனர்.குப்பிநாயக்கனுார் அருகே வந்தபோது, மின் ஒயர் அறுந்து விழுந்து கிடந்த நிலையில், அதன் மீது பைக் ஏறியதும், மின்சாரம் பாய்ந்து இருவரும் துாக்கிவீசப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ