உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் நிலத்தை மோசடியாக ஏமாற்றிய பூசாரி உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு

கோவில் நிலத்தை மோசடியாக ஏமாற்றிய பூசாரி உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு

சங்ககிரி:கோவில் நிலத்தை மோசடியாக ஏமாற்றிய கோவில் பூசாரி, அவரது சகோதரருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் ஐயனாரப்பன் கோவிலுக்கு, பங்காளிகள் சேர்ந்து அப்பகுதியில் உள்ள, 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கி பயன்படுத்த முடிவு செய்தனர். அந்த நிலத்தை, கோவில் பூசாரியான மணி பெயரில் கிரயம் செய்துள்ளனர். அதையடுத்து கிரயம் பெற்ற சொத்தை, பங்காளிகளுக்கு தெரியாமல் பூசாரி மணி, அவரது சகோதரான ஆறுமுகத்தின் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.இந்த தகவல் பங்காளிகளுக்கு தெரியவந்ததையடுத்து, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில், 2009ம் ஆண்டு டிச., 8ல் பூசாரி மணி, ஆறுமுகம் மீது பங்காளிகளில் ஒருவரான ஜெயபூபதி என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து சகோதரர்கள் மணி, ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கடந்த, 15 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கிற்கு, நேற்று நீதிபதி பாபு தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட கோவில் பூசாரி மணி, அவரது சகோதரர் ஆறுமுகம் இருவருக்கும் தலா, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை