| ADDED : பிப் 13, 2024 10:48 AM
சேலம்: விநாயகா மிஷன் பல்கலை கழகத்திற்குட்பட்ட, சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, பல்வேறு அமைப்புகள் மூலம் பல அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து, துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் கூறியதாவது: குளோபல் யுனிவர்சிட்டி ரேங்கிங் தரவரிசையானது, உலகளாவிய அளவில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, பல்வேறு அங்கீகாரங்களை வழங்கி வரும் அமைப்பாகும்.சமீபத்தில் நடத்திய தரவரிசை பட்டியலில், டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் கேம்பஸ் நிறுவனம் என்ற அங்கீகாரம் கல்லுாரி வளாகத்தில், மாணவர்களின் நலனுக்காக கல்வி மற்றும் இதர நிலைகளில் புதுமையை புகுத்தி திறம்பட செயல்பட்டு வருவதை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறந்த, ௨௫௦ நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் நிறுவன தரவரிசையில், முன்னணி அரசு சாரா நிறுவனமாக ஆர் உலக நிறுவன தரவரிசை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி, துல்லியமாக செயல்பட்டு வரும் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அங்கீகரித்து வருகிறது. அதன்படி, இவ்வாண்டிற்கான தரவரிசை பட்டியலில் டைமண்ட் தரவரிசை வேலைவாய்ப்பு மற்றும் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு ஆராய்ச்சி பிரிவில் சிறந்து விளங்குதல் இந்திய கல்வி தரவரிசை ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.டீனுக்கு, பல்கலை கழக வேந்தர் டாக்டர். கணேசன், துணை தலைவர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.