உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடையில் ஆண் சடலம் அடித்துக்கொலையா?

ஓடையில் ஆண் சடலம் அடித்துக்கொலையா?

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் உள்ள கழிவுநீர் ஓடையில் நேற்று துர்நாற்றம் வீசியது. சிலர், ஓடையில் பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அறிந்து வந்த வீராணம் போலீசார், உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர். மேலும் ஓடை அருகே, டாஸ்மாக் கடை உள்ளதால், போதை தலைக்கேறிய நிலையில் வந்து ஓடையில் விழுந்து இறந்தாரா அல்லது யாராவது அடித்துக்கொன்று உடலை ஓடைக்குள் வீசிச்சென்றனரா என்ற கோணத்தில் போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ