உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அன்புமணிக்கு வரவேற்பு: பா.ம.க., ஆலோசனை

அன்புமணிக்கு வரவேற்பு: பா.ம.க., ஆலோசனை

சேலம்: சேலத்தில் வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதி, பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி தலைமை வகித்தார். கட்சி வளர்ச்சிப்பணி, உறுப்பினர் சேர்த்தல், சேலத்தில் அக்டோபரில் நடைபயணம் மேற்கொள்ளும் அன்புமணிக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பசுமை தாயக மாநில இணை செயலர் சத்ரிய சேகர், மாவட்ட செயலர் சரவணகந்தன், தலைவர் குமார், அமைப்பு செயலர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ